சிடி

சிறுவர் சிறுமியருக்கான சாலை விதிப் பாடல்கள்
ஆடியோ சிடி

இயற்றியவர் 
குழந்தை இலக்கியச் செல்வர்
திரு. பி. வெங்கட்ராமன், Retired PRO of TVS

இசை
கீர்த்தனாலயா, சேலம்
தயாரிப்பு
காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம், சென்னை
 
தொடர்புக்கு...
திரு.பி. வெங்கட்ராமன், 044-22421653, 9841076838
காம்கேர் சாஃப்ட்வேர் - 9444949921
 
விலை
RS. 60/-சிறுவர் சிறுமியருக்கான சாலை விதிப்பாடல்கள்
என்ற ஆடியோ சிடி குழந்தைகளுக்கு
சாலை விதிமுறைகளை
இசை வடிவில் கற்றுக் கொடுப்பதைப் போல
வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பாடலுக்கும் முன்னும், பின்னும்
பள்ளி மாணவ, மாணவியரோடு உரையாடுவதைப்
போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்ற விதம்,
இதன் பெரும் சிறப்பாகும். இதன் காரணமாய்
பாடல்களை காதால் மட்டும் கேட்கும் போது
சலிப்பும், அலுப்பும் வராமல்,
உற்சாகமாக கேட்கத் தூண்டுகிறது.

குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளின்
குதூகலமான குரல்களையும்,
சிரிப்பொலிகளையும்,
கோரஸ்களையும் பாடல்களின்
இடை இடையே கேட்கும் போது
குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல்
பெரியோர்களான நமக்கும் ஆனந்தம்
தொற்றிக் கொள்வதை மறுக்க முடியவில்லை.
மேலும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும்
கேள்வி பதில்களை போல பாட்டுப் பாடும் பெண்,
குழந்தைகளிடம் அப்பாடல் சம்பந்தமாக
கேள்வி கேட்க, குழந்தைகள் குதூகலமாக
பதில் சொல்வதைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கின்ற
முறை, பாடலை கேட்கின்றவர்களுக்கு
பாடலின் கருத்து தானாகவே
மனப்பாடம் ஆகுமாறு உள்ளது.
 
இதில் உள்ள பாடல்களை கவிஞர்
சிறுவர் இலக்கியச் செல்வர் வடமலை அழகர்
என்று போற்றப்படுகின்ற திரு. பி. வெங்கடராமன்
தொலைநோக்குப் பார்வையோடு இன்றைய
போக்குவரத்து நிலையை அன்றே கருத்தில் கொண்டும்,
மேலும் இந்த சாலைப் பாதுகாப்பு உணர்வை
குழந்தைப் பருவத்திலேயே வித்திட்டால்
அது பண்பாகவே அமைந்து அவர்கள்
அதை தவறாமல் கடைபிடித்து பெரியவர்களுக்கும்
அவர்கள் முன்மாதிரியாக இருப்பார்கள் என்ற
உயர்ந்த நோக்குடன் சாலச் சிறந்த
சிறுவர் சிறுமியருக்கான இந்த
சாலை விதிப் பாடல்களை எளிய நடையில்
செவ்வனே தந்திருக்கிறார்.
இவர் TVS நிறுவனத்தில் PRO ஆக பணி
புரிந்து ஓய்வு பெற்றவர்.
தன் 75 வயதிலும் 25 வயது
இளைஞர் போல செயல்படுகின்ற செயலாளர்.
    
இந்த ஆடியோ சிடியில் உள்ள
பாடல்களை புத்தக வடிவமாக
சிறுவர் சிறுமியருக்கான சாலை விதிப்பாடல்கள்
2004-ம் ஆண்டு காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம்
பதிப்பித்து வெளியிட்டது. இதே நிறுவனம்
2012-ம் ஆண்டு திரு. பி. வெங்கட்ராமனின்
புத்தகத்தை ஆடியோ சிடியாக
வெளியிட்டுள்ளது. இதற்கு
சேலத்தில் இயங்கி வருகின்ற கீர்த்தனாலயா
என்கின்ற நிறுவனம் இசை அமைத்து தந்திருக்கிறது.
    
இந்தப் பாடலின் அருமை பெருமையை
உணர்ந்து தனது பள்ளியின் அனைத்து
மாணவர்களும் அறிந்திட வேண்டும் என
ஆண்டு முழுவதும் தினந்தோறும் தன் கையில்
வைத்திருக்கும் பள்ளி நாளேட்டில் சிறப்பாக
வெளியிட்டு சிறப்பித்து ஊக்குவித்தவர்
திருச்சி திருவானைக்காவல்
அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளியின்
தாளாளர் திரு. கே.எஸ்.கணபதி அவர்கள்.
இவரது பள்ளியில் பயிலுகின்ற
1200 மாணவர்களுக்கும் இந்தப் பாடல்கள்
மனப்பாடம் என்று சொல்லி
பெருமை கொள்கிறார் இவர்.
    
சாலை விதிகளைக் கடைபிடிப்போம்,
விபத்துகளைத் தடுப்போம், விலை மதிப்பில்லா
மனித உயிர்களைக் காப்போம் என்ற உறுதியுடன்
சாலைப் பாதுகாப்பு வார விழா ஏற்படுத்தி,
சாலை விதிகளை தவறாமல் கடைபிடிக்க
வேண்டும் என அவ்வப்போது சீராய்
அறிவுரைகள் வழங்கி, மக்களுக்குச்
சாலைப் பயணங்கள் இனிதாய் அமைந்திட
வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு,
ஆண்டுதோறும் அதிக நிதி ஒதுக்கீடுகள் செய்தல்
போன்று நம் தமிழ்நாடு அரசு எடுக்கின்ற
நடவடிக்கைகள் ஒன்றல்ல, இரண்டல்ல கணக்கில் அடங்கா.
    
இந்த சாலை விதிமுறைகளை
சிறு வயதிலேயே போதிக்க வேண்டும் என்பதோடு,
அவற்றைச் சொல்லித் தரும் முறைகள்
பல கோணங்களில் இருக்க வேண்டும் என்பது
முக்கியப் பொறுப்பாய் இருக்க, நம் கவிஞர்
திரு. பி. வெங்கட்ராமன் எளிய நடையில் தந்த
இந்த அரியப் பொக்கிஷத்தை இந்த
ஆடியோ வடிவில் கீர்த்தனாலயா இசை கலந்து தர,
காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் சிடி வடிவில்
தயாரித்து வெளியிட்டுள்ளது.