என்னைப் பற்றி அன்புள்ளங்கள்!

திரு. பி. வெங்கடராமன்
 
சாலச் சிறந்த
சிறுவர் சிறுமியர்க்கு
சாலை விதிகளை
செவ்வனே சிறப்புற எளிய இனிய பாடல்

படைப்பாக தரும்
திரு பி.வெங்கட்ராமன் (வடமலை அழகன்)
சாலைப் போக்குவரத்து துறையில்
புகழுடன் திகழும்
டி.வி.எ.ஸ். நிறுவனத்தில்
நாற்பதாண்டு காலம் நற்பணியாற்றியவர்.

மக்கள் தொடர்பு அதிகாரியாக
எர்ணாகுளம் கிளையிலும்,
பின்னர் நிறுவன இதழாசிரியராக
மதுரை தலைமை அலுவலகத்திலும்
பணியாற்றிய இவர்

புதுக்கோட்டை ஜூனியர் சேம்பரில்
1972-ல் உபதலைவர் (திட்டம்)
பொறுப்பில் செயலாற்றியபோது
இவர் இயற்றிய
சிறுவர் சிறுமியருக்கான சாலை விதிப் பாடல்
பிரசுரத்தை தேசிய தலைவர் திரு பகதூர் சிங் போத்ரா
சிறப்பு வைபவமொன்றில் வெளியிட்டு சிறப்பித்தார்.

திருச்சி வானொலி நிலையம்
இப்பாடலை நன்கே நல்லிசைப் படுத்தி
சிறுவர் சிறுமியர் நிகழ்ச்சிகளில் ஒலிப்பரப்பினர்.

பல்வேறு சாலை பாதுகாப்பு கருத்தரங்களில்
பங்கு பெற்றதும்
சிறுவர் சிறுமியரிடம் சாலை விதிகள் குறித்து
நன்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என
செவ்வனே செயல்படும் இவர்,

படிக்கும் காலத்திலேயே
சிறுவர் இதழ் "டிங்டாங்"கின்
பொறுப்பாசிரியராக திகழ்ந்தவர்.

குழந்தை எழுத்தாளர் சங்க புதுக்கோட்டை அமைப்பின்
உப தலைவராகவும்
நல்லுழைப்பு நல்கியுள்ளார்.

தாம் சார்ந்திருந்த
ரோட்டரி-ஜேஸீஸ் முத்தமிழ் சங்க அமைப்புகளின்
இதழாசிரியராகவும் திறம்பட செயலாற்றியுள்ளார்.

சிறந்த இதழாசிரியர் விருதும்,
சிறந்த குழந்தை இலக்கிய தொண்டிற்காக
"பாலம்" அமைப்பின் கேடயத்தையும் பெற்றுள்ளார்
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


இவரைப் பற்றி அன்புள்ளங்கள்...

திரு. பி. வெங்கட்ராமன் தன் மனைவியுடன்!
திரு பி. வெங்கட்ராமன்
PV
இவர்ஒரு மெழுகுவர்த்தி!
மற்றவர்கள்
வெளிச்சத்துக்கு வர
இவர்
தன்னையே உருக்கிக் கொள்பவர்
நமக்குத் தெரிந்த வரை
நல்லோர் எல்லோருக்கும்
பின்புலம் இவர்
ஆனால்
உண்மையில்
இவர்தான்
அனைவரின் முழு பலம்!

சரோஜா வெங்கட்ராமன்
மற்றவர்களுக்கு
பின்புலம் P.V.
P.V -
யின் பின்புலம்
இவர் மட்டுமே!

- By
காம்கேர் கே. புவனேஸ்வரி